Cricket: கொல்கத்தா மற்றும் மும்பை இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது இந்த தொடரின் முதல் போட்டியை மும்பை அணி நேற்று பதிவு செய்தது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 12 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய தொடக்கத்திலேயே மும்பை அணி பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறின.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் டீகாக் ஒரு ரன்னிலும் சுனில் நரேன் தன் மீதும் எடுக்காமலும் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் யாரும் 30 ரன்களுக்கு மேல் எடுக்காமல் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க பதினாறு புள்ளி இரண்டு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா அணி. இதில் அதிகபட்சமாக மும்பை அணியில் புதிய வீரராக களம் இறங்கிய அஸ்வினி குமார் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 24 ரன்கள் மட்டுமே வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவதாக களமிறங்கிய மும்பை அணி ரோகித் சர்மா நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும் ரிக்கல்டன் சூரியகுமார் 20ம் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை முடித்து வைத்து முதல் வெற்றியை பதிவு செய்தனர். ரிக்கர்ட்டண்ட் 41 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்