புதுடெல்லி: மும்பையில் ரயில் குண்டுவெடிப்பில் 12 பேரின் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த ரயில் குண்டுவெடிப்பு 180 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் 700 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மாநில பயங்கரவாத தலைப்பு பிரிவு போலீசார் இதில் சம்பந்தப்பட்ட 13 பேரை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சிமி பயங்கரவாத இயக்கத்தினர் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் குற்றவாளிகள் என 2015 ஆம் ஆண்டு மும்பை சிறப்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 12 பேர் குற்றவாளியாக கருதிய நிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்றும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இதில் மேலும் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து மும்பை ஹை கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. தூக்கு தண்டனை கைதி விசாரணை காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது.
12 பேரின் விடுதலை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு முறையீடு செய்த நிலையில் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அமர்வு மராட்டிய அரசின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட பின் உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதன் மூலம் எட்டு பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடைய அமர்வு குழு முன் விசாரணைக்கு வந்த நிலையில் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை செய்ய ஐகோர்ட் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாக கருத முடியாது என அமர்வு குழு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.