டேராடூன்: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூரை சேர்ந்த இளைஞர் பிரதீப் மற்றும் இளம் பெண் ஹன்சிகா. இருவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் சிட்குல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஹரித்துவாரில் தனி வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஹன்சிகா நடவடிக்கையில் பிரதீப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஹன்சிகா வேறு ஒரு நபருடன் பேசுவதாக பிரதீற்கு சந்தேகமடைந்த நிலையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிட்குல் பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் நடந்து கொண்டிருந்தார் ஹன்சிகா. அங்கு வந்த பிரதீப் , ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் பேச்சு வார்த்தை முற்றிய நிலையில் பிரதீப் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹன்சிகாவின் கழுத்தை அறுத்து தப்பி சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த ஹன்சிகா சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஹன்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய பிரதீப் தீவிரமாக தேடி வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள்.