தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அறங்காவலராக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரை அரசு நியமித்திருக்கிறது. இதனை கண்டித்து ஹெச் ராஜா அவர்கள் மசூதிகளுக்கு அறங்காவலராக ஹிந்துவை நியமிக்க முடியுமா ?? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த விஷயம் குறித்த ஹெச் ராஜா தெரிவித்திருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவிலான ராஜகோபால பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் நர்கீஸ் கான் என்ற இஸ்லாமிய மதத்தவரை அறங்காவலராக நியமித்திருக்கின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த கடவுளையுமே ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மை aகொண்ட மதத்தவர் எப்படி ஹிந்து கோவிலை பராமரிப்பு செய்வார் என்றும் கோவில்களில் நடக்கக்கூடிய வழிபாடுகளை எவ்வாறு முறையாக மேற்கொள்வார் என்ற கேள்விகளை ஹச் ராஜா கேட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, HRCE சட்டம் அதாவது இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவருக்கு இடம் கிடையாது என்பது இருக்கும் பொழுது எவ்வாறு இந்து சமய அறநிலையத்துறையினர் பேச்சு மதத்தவரை அறங்காவலராக பணியமர்த்த முடியும் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இஸ்லாமிய மதத்தவருக்கு இந்துக்களின் உடைய ஆகம விதிகள் தெரியுமா?? இது திட்டமிட்டு ஹிந்துக்களின் உடைய கோவில்களை அழிப்பதற்கான முயற்சி என குற்றம் சாட்டியிருக்கிறார். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையானது இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு இந்து சமயம் மீது பற்றுள்ள ஒரு அறங்காவலரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.





