தமிழகத்தில் குடும்ப அட்டை மூலம் அத்தியாவசிய தேவையான பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் அட்டைதாரர்களின் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் முன்பு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் வீட்டில் உள்ள அனைவரும் ரேஷன் அட்டையில் கைரேகை வைக்க வேண்டும் என்று ஒரு நடைமுறை வெளிவந்து அதனை பாதி பேர் செய்தும் உள்ளனர். இருப்பினும் முழு சதவீதம் இன்னும் பூர்த்தியாகவில்லை. இதனால் அடுத்தடுத்த உணவு ஸ்டாக்குகளை சேமிப்பதில் கன்பியூசன் ஏற்படுவதாக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் நபர்கள் மட்டுமே தொடர்ந்து கைரேகை வைத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் குடும்ப உறுப்பினர்களில் மற்ற நபர்கள் கைரேகை ரேஷன் அட்டையில் இணைக்கப்படவில்லை. எனவே ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு இதனை கட்டாயப்படுத்தி இருந்திருந்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் மயிலாடுதுறையில் மாவட்ட கலெக்டர் மார்ச் 31ம் தேதி இதற்கு பதிய கடைசி தேதி என்று அறிவித்திருந்தார். இதற்காக அங்கு முகாம்கள் ஏற்பாடும் செய்து இருந்தார். மேலும், விநியோகஸ்தர்கள் மூலம் இதனை முடிக்க வீட்டை நாடி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் திருப்பூர் மாவட்டத்திலும் மார்ச் 31ஆம் தேதி கடைசி என்று அம்மாவட்ட கலெக்டர் கிறிஸ்துவராஜ் அறிவித்துள்ளார். அங்கு பதிவு செய்யப்படாத 14 சதவீதம் பேர் கட்டாயமாக ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை வைத்திருக்க வேண்டும் என்று வெளியிட்டுள்ளார். இல்லையெனில், விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவு குறைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.