திமுக எம்பி ஆ. ராஜா மத்திய அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதை சிறிதும் கண்டிக்காத முதல்வர் தற்சமயம் போலீஸ் ஆத்து மீறி பாஜகவினரை கைது செய்யும்போதும் அமைதி காப்பதை பார்த்தால், முதல்வரும் அவரது கருத்துக்கு ஆமோதிக்கிறாரா என்ற கேள்வியை எழுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே எம்பி பேசியதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில், அதை திமுக நடத்தக்கூடாது என்று கூறியிருந்தது.
எனினும் மத்திய அமைச்சர் என்பதால் பாஜக சார்பில் மாலை 4:00 மணி அளவில் வெவ்வேறு இடங்களில் பாஜகவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே ஆகும் என்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதனைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் அவர்களை முதலில் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழகத்தில் நடக்கும் வேறு பிரச்சினைகளை துளியும் யோசித்து பார்க்காத திமுக காலையில் பிரவீன் ராஜை கைது செய்துள்ளனர். திமுகவினருடைய அதிகார மமதேயே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பவும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்