புதுக்கோட்டை அதிர்வலைகள் இன்னும் குறையல அமித் ஷாவைக் கண்டு அஞ்சுகிறதா திமுக நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக-வை மிகக் கடுமையாகச் சாடினார்.
புதுக்கோட்டை மேஜிக்: சமீபத்தில் புதுக்கோட்டையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் குறித்துப் பேசிய அவர்:
“புதுக்கோட்டையில் திரண்ட அந்
தப் பெருங்கூட்டத்தைப் பார்த்ததுமே திமுகவினர் மிரண்டு போய்விட்டனர். தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு இருக்கும் செல்வாக்கை அமித் ஷாவின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது.”
“மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்துபோய்த் தான், திமுகவினர் எங்களது கூட்டணியைப் பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள்” என்று நயினார் தெரிவித்தார்.
கூட்டணி பற்றி: அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2026-ல் இந்தக் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், ஆட்சி மாற்றத்திற்கு அமித் ஷாவின் வியூகங்களே அடித்தளமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக-வுக்குப் பதில்: பாஜக-வை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்ற திமுக-வின் வாதத்திற்குப் பதிலளித்த அவர், “அமித் ஷா கூட்டத்திற்கு வந்த கூட்டம் காசு கொடுத்துக் கூட்டிய கூட்டம் இல்லை, அது தானாகத் திரண்ட மக்கள் கூட்டம். இதற்கான விடையைத் தேர்தல் முடிவுகள் சொல்லும்” என சவால் விடுத்தார்





