பாஜக கட்சி எம்எல்ஏ சரஸ்வதி அவர்களின் மகள் இறப்பிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அவரிடம் பலவிதமான கேள்விகள் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 8ஆம் தேதி மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வரவிருக்கிறார். அவர் அன்று காலை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் முடித்துவிட்டு, பின்னர் சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களோடு கலந்தாலோசிக்க உள்ளார். செய்தியாளர் ஒருவர் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை புரியும் அந்நாளில் விஜய் கட்சியில் இணைவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு அவர், திமுக ஆட்சி ஒரு சட்ட விரோத ஆட்சி. அதை அகற்ற வேண்டும் என்றால் மற்ற அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். விஜய்க்கு அது நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே விஜய்க்கு கட்சியின் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு பதில் இனி தான் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரிடம், ஞானசேகரன் வழக்கு தீர்ப்பிற்கு அண்ணாமலை கொடுத்த கெழு குறித்து கேட்டபோது, பாலியல் வன் கொடுமை புகார்கள் ஏராளம் உள்ளன. மேலும் இரட்டை கொலை வழக்கில் பாஜக போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அதில் போலீசார் திறம்பட செயல்படுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். கமலின் கன்னட பேச்சு குறித்த விவகாரத்தை கேட்டபோது, அவரவர் தாய் மொழியை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை. ஆனால் அடுத்த மொழியோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





