1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான புதுநல்லு புது நாட்டு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெப்போலியன். இவருக்கு நெப்போலியன் என்ற பெயரை பாரதிராஜா தான் வைத்திருக்கிறார். அப்பொழுது தனக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை என பாரதிராஜாவிடம் கூறிய பொழுது இந்த பெயர் நன்றாகத்தான் இருக்கும் என அவர் கூறி துவங்கி வைத்த சினிமா வாழ்க்கை.
சினிமாவில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பின்பு அரசியலில் களம் காண நினைத்தால் நெப்போலியன் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக போட்டியிடுகிறார். அதன் பின்பு இரண்டு முறை எம்பி பதவி பெற்று திமுகவிலிருந்து பாஜகவிற்கு கட்சி மாறுதல் செய்து கொண்டார்.
தன்னுடைய மூத்த மகன் தனுஷ் அவர்களின் மருத்துவ தேவைக்காக நடிப்பு அரசியல் என இரண்டையும் விடுத்து அமெரிக்காவிற்கு குடிப் புகுந்து தற்பொழுது தன்னுடைய பெரிய மகான் தனுஷ் அவர்களுக்கு திருமணத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
சமீபத்தில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் முதல் பட காட்சி குறித்து நெப்போலியன் பகிர்ந்த தகவல் பின்வருமாறு :-
முதன்முதலாக நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நெப்போலியன் அவர்களுக்கு காத்திருந்தது நெகட்டிவ் ரோல் என்றும் எடுத்த உடனே எப்படி அபசகுனமான காட்சிகளில் நடிப்பது என தயங்கியவரே தான் என்று இருந்ததாகவும் ஏன் உன்னுடைய முகம் இப்படி இருக்கிறது என பாரதிராஜா கேட்டதற்கு தன்னால் எதையும் வெளிப்படையாக கூற முடியாத சூழ்நிலையில் ஒன்றுமில்லை என தெரிவித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இவர் முகம் இவ்வாறு இருந்ததை அறிந்து கொண்டா பாரதிராஜா அவர்கள் வர்ற லட்சுமிய யாருடா தடுத்து நிறுத்த முடியும்? நான் எப்பொழுதுமே நல்லதை தான் சொல்லுவேன். நல்லதத்தான் செய்வேன் .ஜனங்க புரிஞ்சுக்கணும் என நல்ல முறையில் வசனத்தை துவங்கி அவருடைய வாழ்வையும் தூக்கி விட்டதாகவும் அதன் பின்பு தான் தன்னுடைய வாழ்வில் லக்ஷ்மி வர துவங்கினார் என்றும் தெரிவித்திருக்கிறார்.





