கடந்த ஜூன் ஐந்தாம் தேதி பூமியிலிருந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக புறப்பட்டுச் சென்று இருந்தார் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர். எட்டு நாட்கள் தங்கி அங்கு வேலை செய்து திரும்புவதாக இருந்த நிலையில், அவர்கள் சென்றிருந்த விண்கலம் பழுதடைந்து விட்டது. இதன் காரணமாக அவர்கள் விண்வெளி மையத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. அவர்கள் தொடர்ந்து அந்த விண்கலத்தை தயார் செய்யும் வீடியோக்களும், அவ்வப்போது அவர்கள் ஸ்பேஸில் எடுத்துக்கொண்டு இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்தன. பலரும் அவர்கள் பூமிக்கு திரும்ப வேண்டி எடுத்துரைத்து வந்திருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவும், அவர்களை மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கு பல முயற்சிகள் எடுத்து தோல்வி கண்டிருந்தன. இந்நிலையில், அவர்களை அழைத்து வர எலான் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் விண்கலமான டிராகன் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் அனுப்புவதற்காக ஜப்பான், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சார்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் புறப்பட இருந்தனர். கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் மெஷின் பழுது காரணமாக அதுவும் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை நாலரை மணிக்கு அமெரிக்காவில் இருந்து டிராகன் விண்கலம் பொருந்திய ஸ்டார் எக்ஸ் பால்கன் 9 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இது விண்வெளியை வேகமாக சென்று இருந்தாலும், ஆராய்ச்சி மையத்தை சென்றடைய பதினாறு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவானது, இன்னும் குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. விண்வெளி சூழல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இது முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அவர்கள் பூமிக்கு எப்பொழுது வருவார்கள்? என்ற அதிகாரப்பூர்வ தகவல் நாசா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.