அக்ரா: மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். கானாவில் பிரதமர் மோடியை பாராட்டி நாட்டின் தேசிய விருதான “ஆபீஸர் ஆப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்” என்ற விருது வழங்கப்பட்டது. உலகளாவிய தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த விருதுநகர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு எட்டு நாட்கள் சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரதமர்.
நேற்று கானா விற்கு சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் பிரதமர் மோடி , அதிபர் ஜான் மகாவை கலந்து பேசினார். அதில் இரு நாடுகளுக்கிடையே உள்ள கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி பேசப்பட்டது.
அவ்வேளையில் பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய தேசிய விருது “டி ஆபீஸர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்” என்று விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கானா பிரதமர் ஜான் மகாவா கழுத்தில் அணிவித்து பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர், கானா நாட்டின் உயரிய விருதாக “தி ஆபீஸர் ஆப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்” என்ற விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் நான் ஏற்றுக்கொண்டேன். இந்த விருதினை இளைஞர்கள், கலாச்சாரம் மற்றும் இந்தியா நாட்டின் உறவுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் யாரும் செல்லாத நிலையில் நரேந்திர மோடி சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கான நாட்டிற்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் அவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.