நீட் 2025 முடிவுகள் இன்று வெளியீடு!! எதிர்பார்ப்பின் உச்சத்தில் மாணவர்கள்!!

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதித் தேர்வான நீட் (NEET UG) 2025 தேர்வின் முடிவுகள் இன்று (ஜூன் 14) வெளியாகின்றன. மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ இல் அறிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு பெரிய சாதனை: 23 லட்சம் பேர் தேர்வு எழுதி சாதனை புரிந்தனர்! மே 4-ஆம் தேதி நாடுமுழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற நீட் தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக விடைக்குறிப்புக்கும், இறுதி முடிவிற்கும் இடையிலான நடைமுறை: நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூன் 3 அன்று வெளியிடப்பட்டதோடு, அதற்கான எதிர்வினைகளை பதிவு செய்யும் கால அவகாசம் ஜூன் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெற்ற ஆட்சேபனைகளை பரிசீலித்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் பெற பின்வரும் படிகளைக் கடைபிடிக்கலாம்:
1. https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
2. “NEET UG 2025 Result” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
3. உங்கள் Application Number மற்றும் Password உள்ளிடவும்.
4. உங்கள் தேர்வு முடிவுகள் PDF வடிவில் தோன்றும்; அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களது மதிப்பெண்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு தயாராக வேண்டும். கலந்தாய்வு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram