இந்திய அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு!! துணை கேப்டன் இவரா?? வெளியானது டெஸ்ட் அணி!! 

New captain of the Indian team announced

cricket: இந்திய அணி வீரர்கள் தற்போது ipl தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான டெஸ்ட் அணி தற்போது வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

தற்போது இந்தியாவில் ipl போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக இந்தியா இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜூன் 20 ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென டெஸ்ட் தொடர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த அதிர்ச்சி மறைவதற்குள் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது மேலும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் தற்போது  இங்கிலாந்த் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்த அணியின் கேப்டனாக கில், துணை கேப்டனாக ரிஷப் பண்ட் என யாஷஸ்வி  கே.எல்.ராகுல், ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, துரூவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram