ஜூலை ஒன்றாம் தேதி முதல் கமர்ஷியல் பிளேஸ் காண மின் கட்டணத்தை மின்சார வாரியம் உயர்த்தி இருந்தது. அதேபோல் புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் அதிலும் ஒன் பேஸ் த்ரீ பேஸ் ஆகிய அடிப்படையில் விலை மாற்றத்தை அறிவித்துள்ளது. அதாவது புதியதாக ஒரு வீட்டிற்கு மின் கட்டண வசதிக்காக மீட்டர் வைத்து செல்வது மற்றும் ஏற்கனவே பழைய வீட்டின் செயலிழந்து உள்ள மின் பாக்சினை மாற்றியமைக்கும் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம். மின்வாரியம் பயன்படுத்திய மின்சாரத்துக்குரிய கட்டணத்தை மட்டும் வசூலிக்கின்றது என்பதே பலருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி புதிய மின் இணைப்பு கட்டணம், மின் பயன்பாட்டிற்கான வைப்பு தொகை, மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்பு தொகை, பதிவு கட்டணம் ஆகிய பல கட்டணங்களை வசூலித்து வருகிறது.
இப்பொழுது இதற்குரிய கட்டணங்களிலும் உயர்வை வெளியிட்டுள்ளது. இது ஒரு முறை செலுத்தப்படுவதாயினும், இதன் கட்டணத்தில் 3.16 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி மின் இணைப்புக்கான கட்டணம் ₹.1070 இல் இருந்து ₹.1105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் ₹215 இல் இருந்து ₹.220 ஆகவும், வைப்புத் தொகை ₹.320 இல் இருந்து ₹.330 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ₹.800 இருந்து 825 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ₹.3000 இலிருந்து ₹.3095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த மீட்டரை மாற்றும் பொருட்டு ₹.1070 இலிருந்து ₹.1105 ஆகவும், மின்னட்டை பெயர் மாற்றம் செய்ய ₹.645 இருந்து ₹.665 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் த்ரீ பேஸ் கான லைனில் இன்னமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் மின்னழுத்தத்தை பொறுத்து அதன் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது பெரும்பாலும் உயர்வை சந்தித்துள்ளது.