சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்த வந்துள்ளது.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நோக்கம் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி ஆதரவை வழங்கவே நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நிதி உதவியுடன் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் வயது 40 க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரர்கள் திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருப்பிடச் சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் வயது சான்றிதழ் ஆகியவை முக்கியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,குடும்ப அட்டை வைத்திருப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. திருநங்கைகள் தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து மாதந்தோறும் 1500 ரூபாய் தனது வங்கி கணக்கில் பெறலாம்.
தகுதிகள்:
40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற திருநங்கைகளாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேரில் அனைவருக்கும் பணம் கிடைக்கிறது என அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 6 லட்சம் பேர் வரை மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறு வருகின்றன.
https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் தங்களது மனுவின் நிலையை பற்றி அறிந்து கொள்ளலாம். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மகளிர் உரிமை திட்ட நிதி உதவி கோரி 5.88 லட்சம் மகளிர்கள் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 45 நாட்களுக்குள் மனுக்களுக்கான தீர்வு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.