ஜிஎஸ்டி ரூல்ஸில் அதிரடி மாற்றம்!! எது எந்த விலைப்பட்டியல் தெரியுமா!!

தற்சமயம் வரை ஜிஎஸ்டி 5%, 12%, 18%, 28% என்ற வரைமுறையின்படி வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதில் 12% வரி விதிப்பு முற்றிலும் நீக்கப்படுவதாக ஜி எஸ் டி கவுன்சிலில் உள்ள பெரும்பான்மையோரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உறுதியான தகவல் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வரிவிதிப்பு அமைச்சர்கள் குழு டிஸ்கஸ் செய்தலில் இனி 12% வரிவிதிப்பு தேவை இல்லை என்று ஒருமித்தமாக முடிவெடுத்து உள்ளனர். மேலும் இதுவரை 12% வரி விதிப்பில் உள்ள பொருட்களை 5% மற்றும் 18% வரி விதிப்புகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

12% வரி விதிப்பின் கீழ் உள்ள அத்தியாவசிய பொருட்கள் 5% ஆகவும், ஆடம்பரம் மற்றும் நவீன பொருட்கள் 18% ஆகவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் இதுவரை 12% வரிவிதிப்பு செய்து வந்தோர் 5% க்கு மாற்றினால் பரவாயில்லை 18%க்கு மாற்றினால் என்ன செய்வது? என்று நிலை குளைந்துள்ளனர். இதுவரை 12% வரிவிதிப்பில், கெட்டி பால், சீஸ் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை பல தரப்பட்ட பொருட்கள் இடம்பெற்று இருந்தன. மாற்றம் செய்யப்பட போகும் அந்த புதிய அணுகு முறையில் மக்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது பாரம் இறங்காதபடி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வரி விதிப்பு நீக்குவதையும் இவர்கள் பெரும்பாலும் வரவேற்கின்றனர். இந்த முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் முன்னர் அதை பல நிபுணர்களின் அறிவுரையின் கீழ் கொண்டு வழி நடத்துவது நல்லது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram