கடந்த 2017 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அப்போது நடப்பில் உள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று இருந்தது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு இருந்தது. மீண்டும் சிறிய இடைவெளியில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று இருந்தது. இதனால் கள்ள நோட்டுகள் குறைக்கப்படும் என்ற நோக்கில் செயல்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னராக சக்தி காந்ததாஸ் இயங்கி வந்துள்ளார். அவரின் பணி காலம் நிறைவுற்ற நிலையில், அவரைத் தொடர்ந்து சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்றுள்ளார். அவரின் கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகள் வெளிவந்து புழக்கத்தில் ஏற்கனவே உள்ளது. மேலும், அவர் ரெப்போ வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பமிட்ட புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு வருகின்றது. இது கூடிய விரைவில் புழக்கத்தில் வரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால் மீண்டும் பழையபடி சிரமத்திற்கு மக்கள் ஆளாக்கப்படுவார்களா! என்ற ஐயம் பலரின் மத்தியில் நிலவுகிறது. ரிசர்வ் வங்கி இதில் முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்றும் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.