கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கல்வி வளாக மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். மாணவர்கள் எழுத்தறிவு திறனை மேம்படுத்த புதிய எழுத்தறிவு மேம்பாட்டு மையம் (Literacy Intervention Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிதியுதவி செய்துள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 16 அரசுப் பள்ளிகளில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் (STEM & SILC) திறக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஆர்வம் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நிகழ்ச்சியில் மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு, சுகாதார உணவுத் திட்டம் “வாட்டர் பெல்” விரைவில் அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். குழந்தைகள் பள்ளியில் nutritious (ஊட்டச்சத்தான) உணவைச் சாப்பிட்டு, அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் உடற்பயிற்சி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: “பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் தண்ணீரையும், ஊட்டச்சத்து மிக்க உணவையும் தவறாமல் உட்கொள்ளும் பழக்கம் உருவாக வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழுப் பங்களிப்பும் தேவைப்படுகிறது” என்றார்.
பின்னர் உருது கல்வி தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் மூன்று உருது கல்விச் சரகங்கள் செயலிழந்த நிலையில், தற்போதைய திராவிட மாடல் அரசு ஆட்சியில் அதை 6 ஆக உயர்த்தி சிறுபான்மையினர் நலனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மாணவர்கள் ஆரோக்கியமாகவும் அறிவாற்றலுடன் வளரவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.





