வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு விருந்தளித்தார். விருந்து நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் வரிவிதிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது இங்கிலாந்து, சீனா ஆகியவற்றிடம் அமெரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என்று கூறினார். மேலும், எந்தெந்த நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் அந்தந்த நாடுகளுக்கு கடிதங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம் என்று கூறினார்.
சில ஒப்பந்தங்களை ஏற்படுத்த நான் முன்னதாகவே கூறி கடிதங்கள் அனுப்பியுள்ளேன் என்று கூறினார். இதற்கு முன் இல்லாத அளவிற்கு முதலீடு செய்ய உள்ளோம் என்றும், சிறந்த மற்றும் வெற்றியடைந்த நாடுகளுடன் மட்டுமே பயணிக்க வருகை தரும்படி அமெரிக்கா வலியுறுத்துகிறது என்று பேசினார்.
தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சீனா உடனான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டது என்றும், இந்தியாவுடன் ஒப்பந்தம் கூடிய விரைவில் முடிய உள்ளது என்றும் கூறினார். புதிய வரி விதிப்புகளுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்று இருக்காது என கூறப்படுகிறது.
மியான்மர், தாய்லாந்து, ஜப்பான், வங்காளதேசம் மற்றும் தென் கொரியா போன்ற 14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளதாக கூறினார். இந்த வரி விதிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அந்தந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளது என்று இதனை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.