SALEM: சேலம் ஏற்காடு மலைப்பகுதியில் 60 அடி பள்ளத்தில் அழகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
துறையூரை சேர்ந்த லோகநாயகி என்ற பெண்ணை நான்கு நாட்களுக்கு முன் ஏற்காடு மலைப்பகுதியில் கொலை செய்து 60 அடி பள்ளத்தில் தூக்கி வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது இந்த கொலை வழக்கில் புதுப்புது திருப்பங்கள், தற்போது வெளியாகி வருகின்றன. லோகநாயகி என்ற பின் சேலத்தில் டீச்சராக பணிபுரிந்து தனியார் விடுதியில் தங்கி வந்த நிலையில் பெரம்பலூரை சேர்ந்த அப்துல் ஹபீஸ் என்ற இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் அவருக்காக மதம் மாறியுள்ளார்.
அதே சமயம் அப்துல் ஹபீஸ் தாஹியா சுல்தானா என்ற பெண்ணுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவளின் தோழி மோனிஷவையும் காதலித்து வந்துள்ளார் அந்த காதல் மன்னன். இந்நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து லோகநாயகியை விஷ ஊசி போட்டு ஏற்காடு மலை பகுதியில் வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் மோனிஷா தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மோனிஷா தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன்னை குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று லோகநாயகி மிரட்டியுள்ளார்.
அதனால் மோனிஷா மற்றும் தாஹியா என மூவரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளனர். அதில் மோனிஷா மருத்துவகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், அவர் விஷ ஊசி போட்டு கொலை செய்ததாகவும், மிரட்டித்தான் இதை செய்தேன் இல்லையெனில் இருவரும் இருக்கும் அந்தரங்க வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டித்தான் இதை செய்ததாக கூறியுள்ளார்.