கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் விமான இலக்கை நிர்ணயித்து உள்ளது நியூசிலாந்து அணி.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, மதுரை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணி இடையில் ஆன இரண்டாவது அரையா எழுதி போட்டி இன்று தொடங்கியது இதில் நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து கிளம்பி இறங்கியது. இதில் ரச்சன் ரவீந்திர மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சதம் விளாசி சிறப்பாக விளையாடினர்.
தொடர்ந்து டரில் மிட்செல் 49 ரன்களும், கிளென் பிலிப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 49 ரன்களும் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் ஆக இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் இதுவே அதிகபட்ச ரன் ஆகும். அதில் முதலாவதாக இன்று நடைபெற்ற 362 நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 356 ரன்கள் எடுத்திருந்தது, மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 351 ரன்கள் எடுத்தது, நான்காவது நியூசிலாந்து அணி 347 ரன்கள் usa-க்கு எதிராக எடுத்தது, ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக 338 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது தென்னாபிரிக்கா அணி இந்த இலக்கை எட்டி வெற்றி அடையுமா என தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.