கிரிக்கெட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி போட்டி நடந்து முடிந்தது தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்ற வருகிறது.
இன்று மதியம் 2:30 மணியளவில் தொடங்கிய நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணி இடையிலான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதில் தொடக்க வீரரான வில் யங் 7 வது ஓவரில் லுங்கி நெகிடி வீசிய பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் அவுட் ஆனார். தொடக்கத்திலிருந்து ரச்சின் ரவீந்திர சிறப்பாக விளையாடி 11 பந்துகளை எதிர் கொண்டு 108 ரன்கள் அடித்து சதம் விளாசி பட்டையை கிளப்பினார்.
தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தார் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 94 பந்துகளை எதிர் கொண்டு 102 ரன்கள் அடித்து இரு வீரர்களும் இரண்டு சதங்களை விளாசி அணியில் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பின் இரட்சின் ரவீந்தரா 34 வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் 40 வது ஓவரில் மில்டர் வீசிய பந்தில் லுங்கி நெகிடி கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
தற்போது நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை எடுத்து 42வது ஓவரில் 258 ரன்கள் இருக்கும் நிலையில் விளையாடி வருகிறது மைதானத்தில் டேரில் மிட்செல் மற்றும் கிரன் பிலிப்ஸ் பேட்டிங் செய்து வருகின்றனர். 50 ஓர் முடிவு என்னும் போது அணியின் எண்ணிக்கை 300-க்கும் மேல் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் தோற்றால் தோற்கு மணி வெளியேறும் வெற்றி பெற்றால் இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.