Cricket : நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அடியில் ஆன இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் போட்டியில் நடைபெற்று முடிந்த நிலையில், அரையிறுதியின் முதல் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இரு அணிகளும் மோதின இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் அடுத்ததாக இறுதிப்போட்டியில் விளையாடுவது நியூசிலாந்து அணியா, தென்னாப்பிரிக்கா அணியா என பலரும் கேள்வி எழுப்பு வந்த நிலையில் இன்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திர சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் வில் யங் 21 ரன்கள் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை நிதானமாக விளையாடினார். இதில் ரச்சின் ரவீந்தரா நூத்தி ஒரு பந்துகளை எதிர் கொண்டு 108 ரன்கள் எடுத்து சதமிலாசினார் இதில் 13 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.
கேன் வில்லியம்சன் 77 பந்துகளை எதிர் கொண்டு 80 ரன்கள் விலாஸ் உள்ளார் இதில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். கேன் வில்லியம்சன் நிதானமாக சதத்தை நெருங்கிக் கொண்டு வருகிறார் 34 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது நியூசிலாந்து அணி. 108 ரன்கள் எடுத்து ரச்சின் ரவீந்தரா ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக டேரில் மிட்செல் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.