கிரிக்கெட்:சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதிய நிலையில் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் நியூசிலாந்தை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள உள்ளது 2000 ம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப் போட்டி, 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதி போட்டி என முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்து அணி இறுதி அணியின் கோப்பை வெல்லும் கனவை தகர்த்தெறிந்ததை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது.
25 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளதும் குறிப்பிடத்தக்கது. போட்டிக்கு பின் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர் கடைசியாக நடந்த போட்டியில் இந்தியாவிற்கு நாங்கள் நெருக்கடி அளித்தோம். அதனால் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்கிறோம் என தெரிவித்தார் மேலும் நாங்கள் இருவரும் ஒருவருடைய விளையாட்டை மற்றொருவர் பார்த்திருக்கிறோம் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் டாப் ஆர்டரில் உள்ள மூன்று வீரர்களை சிறப்பாக வீழ்த்தியுள்ளனர்.
என்றும் டாஸ் வெல்வது கூட வெற்றிக்கு பலனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி சிறப்பான சுழற்பந்து வீச்சால் வீழ்த்தியது இந்நிலையில் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பழைய கணக்கிற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வருகின்றன.





