கிரிக்கெட்: இந்தியாவின் யுக்தியை பயன்படுத்தி நியூசிலாந்து அணியும் எதிர்கொள்ள உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி.
நாளை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோத உள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதி இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இரண்டாம் அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் மோதியது இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தது.
இந்நிலையில் இரு அணிகளும் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தீவிர பயிற்சி செய்து வருகிறது. மேலும் நியூசிலாந்து அணி இந்திய அணியை போலவே தங்களது அணியில் நான்கு சுழற்சிளர்களை விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்தின் கேப்டன் ஷான்ட்நர் மற்றும் பிரேஸ்வெல் இதுவரை விளையாடியப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி இருவரும் இணைந்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
மேலும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா சுழற் பந்து வீசி எதிரணிகளுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார் இந்நிலையில் நியூசிலாந்து அணி நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை அணியில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக இந்திய அணியும் ஜடேஜா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என இரண்டு ஆல்ரவுண்டர் மற்றும் இரண்டு முழு நேர சுழற்பந்து வீச்சாளர்கள் கொண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது அதிகப்படியான நேரத்தை சுழற் பந்து வீச்சினை எதிர்கொள்வதை பயிற்சி செய்து வருகின்றனர். நாளை தொடங்க உள்ள இந்த போட்டியில் யார் கோப்பையை வெல்வது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





