பசி பட்டினியால் பலியான புதுமண தம்பதிகள்!! இந்தியாவுக்கு கால்நடையாக புறப்பட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்!! 

Newlywed couple dies of hunger
பாகிஸ்தானை சேர்ந்த இளம் தம்பதியர் இந்தியாவிற்கு எதிர்காலம் தேடி புறப்பட்டபோது சர்வதேச எல்லையை கடந்த போது பசி பட்டினியால் பலியான புதுமண தம்பதிகள். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் மாதல்லோ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் இளம் தம்பதியர் ரவிக்குமார் மற்றும் சாந்தி பாய். இருவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பாகிஸ்தானில் சிறுபான்மை குடும்பத்தை சார்ந்த புதுமணத் தம்பதியருக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல வாழ்க்கை இந்தியாவில் உருவாக்க நினைத்து விசா கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலால் இருவரின் விசாக்களும் நிராகரிக்கப்பட்டது. இந்தியா வருவதில் நோக்கமாக இருந்ததால் விசா நிராகரிக்கப்பட்டதை பொருட்டாக எடுக்கவில்லை.
இந்தியாவுக்கு வருவது உறுதி செய்வதாக இருந்த போது இரு வீட்டாரும் மறுப்பு தெரிவித்தார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய தார் பாலைவனத்தை நடந்தே கடக்க வேண்டும் என முடிவு செய்தனர். நடந்து செல்வதற்கு தேவையான குடிநீர் மற்றும் உணவை எடுத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் சர்வதேச எல்லையை கடந்துள்ளனர்.
இருப்பில் வைத்திருந்த உணவு மற்றும் நீர் தீர்ந்து போனதால் தாகம் ஏற்பட்டு பரிதாபமாக பாலைவனத்தில் இருந்தனர். இந்திய அதிகாரிகள் அவர்களின் உடல்களை மீட்டு உள்ளனர். இந்தியாவிற்கு வாழ்க்கையை தேடி வந்த பாகிஸ்தான் தம்பதிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தம்பதிகளின் உடல்களை பாகிஸ்தானில் உள்ளவர்களது குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இந்திய அரசு. பாகிஸ்தானில் உள்ள இருவரின் குடும்பங்களிடம் ஒப்படைக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்தவுடன் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
இருப்பினும் இருவரின் உடல்களும் ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் உள்ள அவர்களது உறவினர்கள் தகனம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram