மண்டியிட்டு அமர்ந்திருந்த மதுரோ!! வெனிசுலா அதிபரின் புட்டபர்த்தி ரகசியம்!! வைரலாகும் போட்டோஸ்!!

nicolas-maduro-sathya-sai-baba-devotee-puttaparthi-visit-connection

வெனிசுலா அதிபர் டு புட்டபர்த்தி அமெரிக்கப் பிடியில் இருக்கும் மதுரோவின் ‘சாயி பக்தி’ – உலகம் அறியாத பின்னணி

வாஷிங்டன் / கராகஸ்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அவரைப் பற்றிய ஒரு ஆச்சரியமான ஆன்மீகத் தகவல் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. மதுரோ ஒரு தீவிரமான சத்ய சாய்பாபா பக்தர் என்பது தான் அந்தச் செய்தி.

மனைவி வழியாக வந்த பக்தி: மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ் (Cilia Flores) தான் அவரைச் சாய்பாபாவிடம் அழைத்துச் சென்றவர். மதுரோவின் அலுவலகத்தில் எப்போதும் புரட்சியாளர் சைமன் போலிவர் படத்திற்கு இணையாகச் சத்ய சாய்பாபாவின் பெரிய புகைப்படமும் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரோவின் இந்தியா விசிட் (2005): கடந்த 2005-ம் ஆண்டு, மதுரோ வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். அங்கு பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர் தரையில் அமர்ந்து பாபாவின் உரையை மிகவும் பணிவுடன் கேட்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

தேசிய துக்க நாள் (2011): கடந்த 2011-ம் ஆண்டு சத்ய சாய்பாபா மறைந்தபோது, மதுரோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார்:

  • வெனிசுலா நாட்டில் தேசிய துக்க நாள் அறிவிக்கப்பட்டது.

  • வெனிசுலா நாடாளுமன்றத்தில் சாய்பாபாவின் ஆன்மீகத் தொண்டுகளைப் பாராட்டி அதிகாரப்பூர்வமான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • ஒரு வெளிநாட்டு ஆன்மீகத் தலைவருக்காக ஒரு நாடு துக்கம் அனுசரித்தது அப்போது உலகையே ஆச்சரியப்பட வைத்தது.

நூற்றாண்டு விழாவும் மதுரோவும்: மிக சமீபத்தில், நவம்பர் 2025-ல் சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மதுரோ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் பாபாவை “ஒளியின் வடிவம்” (Being of Light) என்று அவர் வர்ணித்திருந்தார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram