யுஜிசி வெளியிட்டு இருக்கக்கூடிய சட்ட விதிகளை பின்பற்றி வரக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்த பட்டம் பெற்றால் மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்படும் என்றும் சட்ட விதிகளுக்கு எதிரான முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டால் அவை பட்டப்படிப்புகளாக ஏற்கப்படாது என்று யுஜிசி தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் யூஜிசியின் உடைய அனுமதி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. யுஜிசி தரச் சான்று வழங்கப்படவில்லை என்றால் அங்கு கல்வியின் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும். முறைகேடான முறையில் யுஜிசி இன் தரச் சான்று இல்லாமல் பல கல்லூரிகள் இயங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் வருவதாகவும் இதுபோன்ற கல்லூரிகளில் படிப்பதால் மாணவர்களின் உடைய படிப்பு சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும் என்றும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்காது என்றும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்பொழுது அந்த கல்லூரிகளினுடைய யுஜிசி தரச் சான்று குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் போலியான படிப்பு சான்றிதழ்களை சில கல்லூரிகள் வழங்கி வருவதாகவும் மாணவர்கள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தாங்கள் தேர்வு செய்யக்கூடிய கல்லூரிகளை மிகுந்த கவனத்தோடு தேர்வு செய்ய வேண்டும் என்றும் யுஜிசி அறிவுரை வழங்கி இருக்கிறது.
யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி அவர்கள் யுஜிசி யின் சட்டம் 1956 விதிகளின் படி மாநிலச் சட்டம் மற்றும் மத்தியச் சட்டங்களின்கீழ் மட்டுமே பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்க முடியும் என்றும் மற்றவை போலியானவை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று போலியான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ugcampc@gmail.com என்ற மெயில் ஐடியில் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.