சென்னை: என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேம்மா என்பது போல வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி குறித்து அதிமுக கட்சியினை கிண்டல் செய்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேர்தல் வரும் நிலையில் ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் காட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டுவது வழக்கம். தற்போது கிண்டல்களும், கேலிகளும் செய்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறது.
தவெக கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா,பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேலி செய்து வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தனியார் விடுதியில் நேற்று நடந்த மாணவர்கள் விருது அளிப்பு விழா நடந்தேறிய நிலையில் புஸ்ஸி மற்றும் ஆதவ் அர்ஜுனா கிண்டல் அடித்த வீடியோ கசிந்துள்ளது.
அதிமுகவை பாஜகவே தனது கூட்டணியில் இருந்து தூக்கிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி கூட்டணிக்கு எவனும் வரப்போவது இல்லை என்றும் சிரித்தபடி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 பேரை கூட வச்சிக்கிட்டு அண்ணாமலையே 18 % ஓட்டு வாங்கினார். ஆனால், எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியல என ஆதவ் அர்ஜுனா பேசியது தெரிகிறது. அதிமுக மற்றும் தவெக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பின்னால் தான் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் நடந்த 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தவெக கட்சி தலைவர் விஜய் பற்றி பேச வேண்டாம் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புஸ்ஸி மற்றும் ஆதவ் கிண்டலடித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.