சீனா மற்றும் இந்தியா இடையே மூன்றாவது நாடு தலையிடக் கூடாது!! ஜெய்சங்கர் திட்டவட்டம்!! 

No third country should interfere
சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அரசு முறை பயணமாக சீனாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்கியை சந்தித்து பேசிய போது இரு திறப்பு உறவுகள் போன்ற விஷயங்கள் கலந்து பேசப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி டெப்சாஸ் சமவெளி மற்றும் டெம்சோ பகுதியில் இந்திய ராணுவம் ரோந்து பணிகளை தொடர்வது குறித்து பேசப்பட்டது.
கிழக்கு லடாக்கில் கருவான் மோதல் முடிவடைந்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் இருதரப்பு படைகள் பதற்றத்தை குறைக்க வேண்டும் என சீன தலைவருடன் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மேலும், பேசிய அவர் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கட்டுப்பாடுகளை விதிக்காமல் எதிர்பார்க்கக் கூடிய விநியோகத்தை சீனா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு உறவுகளுக்கு நிலையான எல்லை இருப்பது முக்கிய காரணியாகும். இந்தியா மற்றும் சீனா இரு தரப்பு உறவுகளுக்கும் இடையே மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram