தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் பெரும் வரவேற்பை கொண்டுள்ள நிலையில் ஆண்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துமாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில் பெண்களுக்கென்று பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் அவரது வாக்குறுதி நிறைவேற்றினார். தற்போது மகளிர் இலவச பேருந்து பயண விடியல் திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் சுமார் 1000 ரூபாய் மாதம் சேமித்து இத்திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் எந்தவித கட்டணமும் இன்றி சாதாரணமாக பேருந்துகளில் பயணிக்க முடியும் என்ற நிலையில் இத்திட்டம் பெண்களுக்கு மட்டும் பயனடையும் வகையில் இல்லாமல் ஆண்களும் பயனடையும் வகையில் தமிழக அரசு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கும் வழி வகுத்துள்ளது.
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் :
இன்று காலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வரும் நிலை சட்டப்பேரவையின் கேள்வி போது பேசிய போது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக் குறிப்பு அரசிடம் உள்ளதா என்றும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும்
என்றும் மேலும் ஆண்களுக்கும் விடியல் பயணம் அளிக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சிவசங்கர் ஆண்களுக்கு இலவச பயணம் ஆர்வம் வரவேற்கத்தக்கது மேலும் தொண்டி பகுதியில் பனிமலை அமைக்கும் செயக் குறிப்பு அரசிடம் பரிசீலனையில் உள்ளது என்பதையும் பதில் அளித்தார். பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள் இதனால் பெரியாரின் கொள்கைப்படி பெண்களை மேம்படுத்துவதற்காக இலவச பேருந்து பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கு விடியல் பயணம் வழங்கப்படும் என்றும் பதிலளித்துள்ளார்