Parking policy 2025 என்ற புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள பெரு நகரமான சென்னையில் போக்குவரத்தின ரிசல்ட் அதிகமாக இருப்பதாலும் பெரும்பாலான வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்படுவதாலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இதன்படி தனிநபர் கார் வாங்கும் பொழுது கட்டாயமாக அந்த காரினை நிறுத்துவதற்கான இடம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் மற்றும் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமல்லாது இது குறித்து அலுவலகங்களுக்கும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பொதுவழிப் போக்குவரத்தில் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அல்லது அவர்கள் தங்களுடைய வாகனங்களில் வருகிறார்கள் என்றால் அதற்கான பார்க்கிங் வசதியை முழுமையாக செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்ததோடு முடிந்தவரை தங்களுடைய ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தனிநபர் வாகன தணிக்கை முற்றிலுமாக தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இந்த நடவடிக்கைகளானது பெங்களூர் போன்ற மிகப்பெரிய ஐடி நகரங்களில் பின்பற்றப்படக்கூடிய கொள்கைகளை தழுவி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.