Newyork: துர்க்மெனிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதரான விசாக்க வாகன் என்பவர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்துக்கு சுற்றுலா சென்று உள்ளார். அவர் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் வந்து தரை இறங்கிய உடனே அந்த நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் அவரை அமெரிக்கா விட்டு விரட்டி அடித்தனர்.
அமெரிக்கா அதிபராக புதிதாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் உடனான உறவு என்பது தற்போது விரிசல் அடைய ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அவர்களை களை எடுக்க அமெரிக்காவின் எப் 16 ரக போர் விமானங்களை 3,461 கோடியை பாகிஸ்தானுக்கு அதிபர் டிரம்ப் நிதி ஒதுக்கினார். அதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் பராளுமன்ற கூட்டுக் குழுவில் பாகிஸ்தானை புகழ்ந்து பேசியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவ படை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. அப்பொழுது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 அமெரிக்கா படை வீரர்களும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்கான் பொதுமக்கள் இறந்துள்ளனர். இதற்கு மூலகாரணமாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பே காரணம். மேலும் இதற்கு மூலதனமாக இருந்த முகமது ஹபியுல்லாவை பாகிஸ்தானில் கைது செய்து நாடு கடத்தி சென்றது அமெரிக்கா. இதற்கு உதவி செய்த காரணத்தினால் டிரம்ப பாகிஸ்தானை பாராட்டினார். இந்த சூழலில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரை விரட்டி அடித்துள்ளனர். அனைத்து சரியான ஆவணங்களுடன் அமெரிக்காவில் நுழைந்தும் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்திலேயே துரத்தப்பட்டார். இதற்குக் காரணம் அவருடைய விசாவில் சந்தேகத்திற்கு ஏற்ப சில குறியீடுகள் இருந்ததன் அடிப்படையில் அவரை திரும்ப அனுப்பப்பட்டார் என்று கூறுகின்றனர். அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை அமெரிக்காவில் விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாடுகளில் இருந்து அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க போவதாக அதிபர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு நாடுகளில் இருந்து யாரும் வரக்கூடாது என்று முடிவெடுக்கப்படுவதாக பேசப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரை அனுமதிக்காத காரணத்தை பற்றி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.