நடிகர் எம் ஜி ஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்தது என்பது பெரிதளவில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது குறித்த சில முக்கிய உண்மைகளை தெரிவித்திருக்கிறார் எம்ஜிஆரின் பெரும்பான்மையான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய துரைராஜ். அவர் தெரிவித்த உண்மை பின்வருமாறு :-
எம் ஆர் ராதா அவர்கள் பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு 2 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார். அதில் 1 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள பணத்தை திருப்பி கொடுக்காமல் தயாரிப்பாளர் நீண்ட காலம் இழுத்தடிக்க கடைசியில் இந்த பிரச்சனை எம்ஜிஆர் இடம் சென்று இருக்கிறது. அவ்வாறு பிரச்சனை சென்ற பின்பு எம்ஜிஆர் அவனுடைய 1 லட்சம் ரூபாய்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் அவன் திருப்பி கட்டாயமாக தந்து விடுவான் என தெரிவித்த எம் ஆர் ராதாவை சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்.
அதன் பின்பும் 5 முறை கேட்டு தயாரிப்பாளர் பணத்தை கொடுக்காத நிலையில் கோபமடைந்தால் எம் ஆர் ராதா தன்னுடைய துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டு கோபம் ஓட எம்ஜிஆர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு சென்று நீங்கள் தான் பணத்திற்கு பொறுப்பேற்றீர்கள் எனக்கு அந்த பணத்தை கொடுத்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாக கேட்கவே எம்ஜிஆர் சமாதானம் படுத்த முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் துப்பாக்கியை எடுத்து மாறி மாறி சுட்டுக் கொண்டுள்ளனர். கடன் பெற்றவருக்கு துணை நிற்க போய் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் எம்ஜிஆர் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்த எம் ஆர் ராதாவின் மகனான ராதாரவி அவர்களும் பேட்டி தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் பொழுதும் 1 லட்சம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காததால் இது போன்ற ஒரு சூழல் உருவாகியது என்று தான் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.