2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தங்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி
வருகிறார். இந்த கூட்டங்களில் பேசும் பொழுது இவர் உளறி பேசியிருப்பது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
அரசியல் அப்படிங்கறது குடும்பம் நல்லா இருக்கணும்னு செய்றது. ஆனா நீங்க யாரோட குடும்பம் நல்லா இருக்கு?? ஆட்சி செய்கிறவர்களோட குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதுமா என்பது போல பல கேள்விகளை அடுக்கடுக்காக வைத்த தலைவர் விஜய், எங்களுக்கு எதிராக இவர்கள் செய்த செயல் ஒன்றா இரண்டா என கேட்டதோடு, நாங்கள் ஆளும் கட்சி என அதிமுகவையா சொல்லுகிறோம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என கம்பீரமாக சொல்லிக்கொண்டால் போதாது. அதற்கு ஏற்றவாறு அரசியலும் செய்ய வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்திருக்கிறார்.
புதிதாக வந்த கட்சி வந்த உடனே முதல்வர் பதவியை கேட்பது சரியல்ல என சொல்ல கூடிய நீங்கள், ஏன் புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு இவ்வளவு தொல்லைகளை தருகிறீர்கள். புதிதாக வந்தவுடன் ஆட்சியை பிடிக்க முடியாது என்றால் இவ்வளவு தொந்தரவு தர வேண்டிய அவசியமும் இல்லை இல்லையா என்ற கேள்வியையும் அனுப்பி என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். மேலும் பாஜகவை பாசிச கட்சி என சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, தமிழகத்திலும் பாசிச ஆட்சி தான் நடக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மென் மே கம்
மென் மே கோ
பட் இ கோ ஆன் ஃபாரெவர்
என்ற கவிதையை குறிப்பிட்டு பேசிய தலைவர் விஜய் அவர்கள் இதனை எழுதியவர் அல்பிரட் லார்ட் டென்னிசன் என்ற பெயரை சொல்லுவதற்கு பதிலாக வில்லியம் பிளேக் என பெயரை மாற்றி கூறியிருப்பது சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.