சமீப காலமாகவே பைக் டாக்சி கார் டாக்ஸி ஆகியவை வெகு விமர்சியாக மக்களால் உபயோகப்பட்டு வருகிறது. இதற்கு பிரத்யமாக ola, ஊபர், ரெட் டாக்ஸி, ராபிட்டோ போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெரிய பெரிய மாநகரங்களில் இது போன்ற நிறுவனங்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர். இவர்கள் வெகு நாட்களாகவே சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பி வந்திருந்தனர். பெங்களூர் சென்னை போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளில், ட்ராபிக்கின் காரணமாக இவர்கள் அடையும் சிரமத்தை குறித்தும் எடுத்துரைத்து இருந்தனர்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு தற்போது மத்திய அரசு பரிசிலித்து முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆடினரி நேரங்களில் சாதாரண கட்டணமும், ரஷ் ஹவர்சில் ரெட்டிப்பு கட்டணமும் ஜார்ஜ் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. நார்மலான டிராபிக் உள்ள நேரங்களில் நார்மல் வாடகையும், பீக்கிங் ஹவர்ஸ் எனப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும், இடங்களிலும் இனிமேல் இரண்டு மடங்காக கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வாடகை டாக்ஸியில் போக தயங்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இது மீண்டும் தலையில் இடியை போட்டது போல் உள்ளது. ஆத்திர அவசரத்திற்கு மற்றும் பணிகளுக்கு உபயோகப்படுபவளே இதை கண்டு கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் இதை ஏற்றுக் கொள்வது கடினம் தான் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.