சிவபெருமானுக்கு மிகவும் பிரதிஷ்டியான நாளான சிவராத்திரி அன்று நான் கால பூஜை யிலும் கலந்துகொண்டு விரதம் இருப்பவர்கள் தப்பி தவறையும் ஒரு சில செயல்களை செய்யவே கூடாது. அதை மீறி செய்யும் பட்சத்தில் நான்கு கால பூஜை இருந்தும் எந்த ஒரு பயனும் அளிக்காது.
அந்த வகையில் சிவராத்திரி அன்று விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் கட்டாயம் கெட்ட வார்த்தை அல்லது கெட்டதை நினைப்பது என எதையும் செய்யக்கூடாது.
அதேபோல விரதத்தின் பொழுது அசைவ உணவை எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.
மேற்கொண்டு மது அருந்துவது புகைபிடிப்பது போன்ற தீய பழக்கத்திலிருந்து அன்று ஒரு நாள் தள்ளி இருக்க வேண்டும்.
மேற்கொண்டு விரதம் இருப்பவர்கள் சிவபெருமானையே முழு நேரமும் நினைத்து உருகி பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டுமே தவிர அதிக அளவு இதர வேலைகளில் கடின உழைப்பை போடுவது தவிர்க்க வேண்டும்.
அன்றைய ஒரு நாள் முழுவதும் சிவபெருமானுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும்.
முற்றும் துறந்தவராக அவர் முன்னிலையில் உட்கார்ந்து நான்கு கால பூஜையிலும் கண்விழித்து கலந்து கொள்பவருக்கு நற்பலன் கிடைக்கும். மேற்கொண்டு விரதம் இருப்பவர்கள் தண்ணீர் மட்டும் குடிப்பது மேல் அதையும் தாண்டி உடல் உபாதைகள் இருப்பவர்கள் பால் பழம் போன்று அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.