தமிழ்நாடு: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ளது. கோடை விடுமுறை பின்னர் மகிழ்ச்சியுடன் வரவேற்க பள்ளிகளை தயார் படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளது அரசாங்கம். முக்கியமாக புதிய கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில் இடை நிற்றலை தடுக்க மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் திறனை அதிகரிக்கவும் வண்டி கல்வித் துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயாராகி வருகிறார்கள்.
வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெயிலின் காரணமாக விடுமுறை நீடிக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மாணவர்களுக்கு திடீரென அதிர்ச்சியை அளக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் புதிய வகுப்பிற்கு செல்லும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தயாராகி வருகின்றனர். அதாவது, மாணவர்களுக்கு புதிய லஞ்ச் பாக்ஸ், பேக், நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், பென்சில், பேனா போன்ற பொருட்களை வாங்கி மகிழ்ச்சியை அளித்து வருகின்றனர்.
தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் ஊக்கப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த குழந்தைகளின் வங்கி கணக்குகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும். தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவி வரும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு விதிக்கும் நெறிமுறைகளை பின்பற்றுவது என்று அவசியம் ஆகும்.
தென்மேற்கு பருவமழை முன்தாகவே தொடங்கி விட்டதால் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். பள்ளிகள் சுத்தம், குடிநீர், இருக்கைகள், மின்சாரம் மற்றும் கழிவறைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆண்டு திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது





