ஆபரேஷன் ட்ரு  பிராமிஸ் 3..ஈரானின் ருத்ர தாண்டவம் ஸ்டார்ட்!! திணறும் இஸ்ரேல்!!

Operation True Promise 3.
டெஹ்ரான்: இன்று அதிகாலை  இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் ஈரான் மீது  நடத்திய தாக்குதலுக்கு,” ஆபரேஷன் ரைசிங் லையன்” என்றும், ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு, “ஆபரேஷன் ட்ரு  பிராமிஸ்-3” என்றும் பெயரிட்டுள்ளது.ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் பெரும் சேதமடைந்துள்ளது.  இதனால் டெல் அவிவ் பதற்றத்தில் உள்ளது.
டெல் அவிவ் பொருளாதார மையம், tel nof விமான தளம், haifa வின் சில இடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம் (காசா கடல் எல்லை), நிதியமைச்சகம் போன்ற 6 இடங்களை மட்டுமே குறி வைத்து தாக்குகிறோம் என்று ஈரான் கூறியிருக்கிறது. ஆனால், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பின் சிறப்பம்சமாக ஏவுகணைகளை துல்லியமாக கண்டுபிடித்து தாக்கும் திறன் கொண்டது.
கொத்து கொத்தாக ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது. எனினும் இஸ்ரேலின் ஒரு சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானும் லேசுப்பட்டது  அல்ல ஈரானின் ஏவுகணைகள் சற்று வித்தியாசமானது, அதில் khalid farzh ரக ஏவுகணைகளில் சுமார் 1 டன் அளவு வெடி பொருட்களை எடுத்து செல்லும். அதேபோல் 10 மாடி கட்டிடத்தை அழிக்கும் தன்மை கொண்டது. தாக்குதலின் போது ஏற்படும் அதிர்வலைகளால் மரணம் நிச்சயம்.
ஈரான் நடத்திய சோதனை ஏவுகணையில் 2 டன் அளவு வெடி மருந்துகளை எடுத்து செல்லும் அளவுக்கு திறன் கொண்டது.  எடுத்துக்காட்டாக , 100 ஏவுகணைகளை ஈரான் ஏவுகிறது என்றால் அதில் 90 ஐ இஸ்ரேல் தடுத்தால் கூட மீதம் உள்ள 10 ஈவுகணைகளே  இஸ்ரேலை சேதப்படுத்துவதற்கு  போதுமானது. 2000 க்கும் மேலான ஏவுகணைகளை ஒரே நேரத்தில் அனுப்ப உள்ளது திட்டமிட்டுள்ளது. மேலும், ஆபரேஷன் ட்ரு  பிராமிஸ் 3 வை உடனடியாக நிறுத்த போவதில்லை என்று தெரிவித்துள்ளது ஈரான்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram