கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருப்பவர் ஜெய்ஷா அவர் மீது குற்றம் சுமத்தி எரிகிறது பாகிஸ்தான் அணி..
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான ஓட்டு தொடரை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்தியது இந்த தொடரில் இறுதிப் போட்டியானது நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது இதன் மூலம் மூன்றாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த வெற்றியை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வரும் நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய்ஷா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அதாவது இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஸ்ரேயர்ஸ் ஐயர் முதலில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்கும் முயன்ற போது நியூசிலாந்து வீர ஜெமிசன் அந்த கேட்சை தவறவிட்டார்.
இதைப் பார்த்து ஜெய்ஷா மகிழ்ச்சியில் கொண்டாடினார். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒரு சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? இவ்வாறு ஒரு வீரர் செய்யும் தவறை பார்த்து கொண்டாடுவது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதற்கு இந்திய ரசிகர்கள் பதிலளிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜெய்ஷா முதலில் ஒரு இந்தியர் அதன் பிறகு தான் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி வரை பாகிஸ்தான் அணி வர முடியவில்லை, லீக் போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது அதுமட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்தி வரும் நிலையில் இறுதி போட்டியை நடத்த முடியாமல் போனது. இதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி ரசிகர்களும் ஜெய்ஷா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். ஏற்கனவே ஹர்திக் பாண்டியா 6 அடித்ததை ஜெய்ஷா கொண்டாடியதை பாகிஸ்தான் இதே போன்று குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.





