பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு!! 50% பெட்ரோல் ஒதுக்கீட்டை வெட்டியது பஞ்சாப் அரசு!! அரசின் ‘வார் ஆஸ்டெரிட்டி’ திட்டம் என்ன??

pakistan-fuel-crisis-punjab-austerity-measures-march-2026

உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமும் பாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு தற்போது கடும் சிக்கன நடவடிக்கைகளை (Austerity Measures) கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மாகாண அரசு எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெட்ரோல் ஒதுக்கீடு உடனடியாக 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், அமைச்சர்கள் ஒரு கூடுதல் வாகனத்தை மட்டுமே பாதுகாப்பு தேவைக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் தட்டுப்பாட்டைக் கையாள மார்ச் 10 முதல் மார்ச் 31 வரை அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கும், அரசு அலுவலகங்களில் ‘வொர்க் பிரம் ஹோம்’ (Work from home) முறையை நடைமுறைப்படுத்துவதற்கும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தேவையற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பம்புகளில் hoarding எனப்படும் பதுக்கல்களைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மாவட்ட பெட்ரோலிய கண்காணிப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் சலுகைகளைத் தாங்களாகவே முன்வந்து குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் முழுவதும் மற்ற மாகாணங்களிலும் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram