Cricket : தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதற்கு காரணம் இந்திய அணிக்கு எதிரான தோல்விதான் எனக் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்றது. ஆனால் இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்த போட்டி தான் இந்தியா vs பாகிஸ்தான். இந்தப் போட்டி இரு நாடுகளின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த போட்டியாகும்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனங்கள் சோகத்தில் ஆழ்ந்தது.
இனி வரும் ஒரு லீப் போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி விளையாடும் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி விளம்பர நிறுவனங்களும் சோகத்தில் உள்ளனர். பாகிஸ்தானை அணி இரண்டாவதாக நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்த நிலை அப்படியே மாறி இருக்கும் ஆனால் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விளம்பர நிறுவனங்கள் இனி பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளில் காண்பார்களா? நேரில் போட்டியை காண வருவார்களா? என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்து நடைபெற உள்ள பாகிஸ்தான் டி20 லீக் போட்டியில் தான் இதற்கான தாக்கம் வெளிப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது தான் என கூறப்படுகிறது.





