5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்.. உலகளாவிய குறியீட்டில் முதலிடம்!! 2026-ஆம் ஆண்டின் பகீர் அறிக்கை!!

pakistan-tops-global-terrorism-index-2026-deaths-highest-since-2013-news

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace – IEP) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் (GTI), பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவை பின்னுக்குத் தள்ளி, பாகிஸ்தான் இந்தப் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் மட்டும் சுமார் 1,139 பேர் பயங்கரவாதத் தாpakistan-tops-global-terrorism-index-2026-deaths-highest-since-2013-newsக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,045 பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய உயிரிழப்பாகும்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) ஆகிய அமைப்புகளின் அதிரடித் தாக்குதல்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, எல்லையோரப் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்பாடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களில்தான் 74 சதவீதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. உலகளவில் பயங்கரவாத மரணங்கள் 28 சதவீதம் குறைந்திருந்தாலும், பாகிஸ்தானில் மட்டும் நிலைமை மோசமடைந்து வருவது சர்வதேசச் சமூகத்தின் கவலையை அதிகரித்துள்ளது. ஈரானுடனான எல்லையோர மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தோல்விகள் பாகிஸ்தானை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram