கிரிக்கெட்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரை எச்சரித்து பேசியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்துகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி முதல் அணியாக அரையிறுதி கூட செல்லாமல் வெளியேறியது. இது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தானின் தோல்வி தழுவியது அதற்கு முன் நியூசிலாந்து அணியுடன் மோதி தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்குப்பின் பேசிய சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் பி டீமே பாகிஸ்தானை தோற்கடிக்கும் என கூறியிருந்தார் மேலும் சீ டீம் தோற்கடிக்குமா என்பது தெரியவில்லை பி டீம் நிச்சயம் தோற்கடிக்கும் என சர்ச்சையாக விமர்சித்து இருந்தார் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், தற்போது பாகிஸ்தான் அணி வேண்டுமானால் மோசமான நிலையில் இருக்கலாம்.
ஆனால் கவாஸ்கர் அவர்களின் புள்ளிவிவரங்களை சென்று பார்த்த பின் பேச வேண்டும். அவர் எங்களுக்கு முன் விளையாடிய ஒரு மூத்த வீரர் அவர் அவர்கள் அணியை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவர்கள் அணி நன்றாக விளையாடி வருகிறது அதற்காக பிற நாட்டை பற்றி பேசும் பொழுது யோசித்து கவனமாக வார்த்தையை விட வேண்டும் இதை நான் கடுமையாக தான் கூறுகிறேன் என இன்சமாம் உல் ஹக் கூறி இருக்கிறார். இதனை இந்திய ரசிகர்கள் நீங்கள் எந்த புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலும் அதில் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக எதுவும் இல்லை என கூறி வருகின்றனர்.





