புதிய பாம்பன் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு அது புழக்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய பாம்பன் பாலம் செயலற்று உள்ளது. மேலும் இந்த பாம்பன் பாலம் செயல்பட்டால் தான் அவ்வழியே நடக்கும் போக்குவரத்து, மீனவர்களின் ரெகுலர் யூசேஜ், அங்கிருந்து கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய முக்கிய கடல் வழி பயணங்கள் நடைபெறும். ஆனால் புதிய பாம்பன் பாலம் புழக்கத்தில் வரப்பட்டதால் பழைய பாம்பன் பாலத்தின் டெண்டர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பழைய பாலத்தின் செயல்பாடுகள் கடந்த 40 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி மீனவர்கள், அவ்வழியே கடல் போக்குவரத்து செய்யும் வியாபாரிகள், இறக்குமதி ஏற்றுமதி ஆகியவை பெரும் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு வணிக ரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடல் வழியாக மும்பை, குஜராத், கேரளா ஆகிய மாநிலத்துக்கு செல்லும் இழுவை கப்பல்களும், நாகை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆழ்கடல் விசை படகுகளும் செயலற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால் அவதிக்குள்ளான வியாபாரிகள் இணைந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பே பாம்பன் துறைமுகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த பழைய பாலத்தை அகற்ற இருப்பதால் தற்சமயம் எதுவும் செய்ய இயலாது என்று அங்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேல் முறையீடு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதனால் கடல் சார்ந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் தற்காலிகமாக உயரும் அபாயம் உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.