கிரிக்கெட் : லக்னோ அணியில் இணைந்த விளையாடினால் முதல் போட்டியில் நிச்சயம் டக் அவுட் தான் என்பது தொடர்கதை ஆகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் இன்று ஆறாவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் ஓத உள்ளது இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வர எந்த அணி முதல் வெற்றியை பறிக்கும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லக்னோ அணிக்கு இதற்கு மூன்று ஆண்டுகள் கேப்டனாக இருந்தவர் கே எல் ராகுல். அவர் அதற்கு முன் கேப்டனாக இருந்த பஞ்சாப் அணியில் விளையாடி ஒரு முறை கூட டக் அவுட் ஆனது இல்லை. ஆனால் லக்னோ அணிக்கு கேப்டனான முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து இந்த வருடம் ஐபிஎல் மெகா இடத்தில் கே எல் ராகுல் விடுவிக்கப்பட்டு ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு 27 கோடிக்கு வாங்கப்பட்டார்.

டெல்லியில் இத்தனை வருடம் கேப்டனாக விளையாடிய ரிஷப் பண்ட் ஒரு முறை கூட டக் அவுட் ஆனதில்லை ஆனால் லக்னோ அணியின் கேப்டனான முதல் போட்டியிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இந்த வீரர் டக் அவுட் ஆனது லக்னோ அணியின் உரிமையாளர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த போட்டியில் அவர் எவ்வாறு விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.