நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது இதில் முதலில் சென்னை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் அடித்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது அடுத்த களம் இறங்கி சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இதனால் ஆறு எண்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
முதல் பேட்டிங் செய்தபோது ராஜஸ்தான் அணியில் நித்திஷ் ரானா அதிரடியாக வெளிப்படுத்தி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் இரண்டாவது பேட்டிங் என்பது சென்னையின் எந்த ஒரு வீரரும் ருத்ராட்ஜ் கெய்க்வாட்டைத் தவிர ரன் சேர்ப்பதில் முக்கியத்துவம் செலுத்தவில்லை வரும் வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் விளக்க ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ராஜஸ்தான் பக்கம் சாய்ந்தது.
இறுதி ஓவரில் இருபது ரன்கள் எடுத்தால் வெற்றி என தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருக்க நிச்சயம் வெற்றி தான் என காத்திருந்த ரசிகர்களுக்கு மிஞ்சியதே பெரிய ஏமாற்றம் தான் கடைசி ஓவரை வீச வந்த சந்திப் சர்மா சிறப்பாக 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இதுவரை ராஜஸ்தானி மூன்று போட்டிகள் விளையாடி தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணி கடைசியாக பெங்களூர் என்னிடம் தோல்வி அடைந்து தற்போது ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்து தோல்வியில் தொடர்ந்து வருகிறது