தனியார் பள்ளியின் நிறுவனங்களில் தங்களுடைய பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் போராடிக் கொண்டிருந்த காலங்கள் மாறி தற்போது அரசு பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். அதன்படி 2025 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதத்தில் துவங்கிய நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 11 வேலை நாட்கள் 78,117 மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காரணம் தனியார் பள்ளிகளில் இருக்கக்கூடிய அதிக அளவிற்கு அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் வகுப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்வி திறன் என அனைத்தும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அவை பின்வருமாறு :-
✓ இலவச கல்வி
✓ காலை மற்றும் மதிய உணவு திட்டம்
✓ இலவச பேருந்து பயண அட்டை
✓ இலவச மிதிவண்டி
✓ உதவித்தொகை
✓ டிஜிட்டல் வகுப்புகள்
✓ மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்
✓ அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு
✓ அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு முதல் ஆய்வகங்கள் வரை வழங்கப்படுகிறது
இது போன்ற பல்வேறு காரணங்களை சிந்திக்க கூடிய பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் முதலாமாண்டு மேலும் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் முதலாவது வகுப்பில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் வேறு பள்ளிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிற வகுப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் ஆன சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.