மும்பை: மராட்டிய மாநிலம் நாக்பூரில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் அதிகாரிகள்.
அப்போது அனில் ஸ்ரீ கிருஷ்ண பரோட் என்ற பயணி விமானத்திற்காக காத்திருந்தார். விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் போது அனில் ஸ்ரீகிருஷ்ண பரோட் என்று பயணியின் உடமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அவரது உடைமைகளில் நாட்டுத் துப்பாக்கி 1 மற்றும் 2 தோட்டாக்கள் இருந்ததை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். பயணி ஸ்ரீ கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தியதில் பாஜக பழங்குடியின பிரிவு தலைவராக இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண பரோட்டத்தை கைது செய்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், நாட்டுத் துப்பாக்கி எவ்வாறு வந்தது? இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.