மீண்டும் ஒரு விமான விபத்து!! அதிஷ்டவசமாக தப்பித்த பயணிகள்!!

Passengers who luckily escaped!!

மசாசூசெட்ஸ் : அமெரிக்க மசாசூசெட்ஸ் நகரிலிருந்து இறங்கிய ஜெட்ப்ளூ 312  விமானம் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்தது.  அமெரிக்காவின்   மசாசூசெட்ஸ் நகரிலிருந்து ஜெட்ப்ளூ 312 ரக விமானமானது  பயணிகளை விட்டு இறங்கிய போது  ஓடு பாதையில் சென்றது. அப்போது திடீரென ஓடுபாதையை விட்டு விலகியது. பின் அருகில் இருந்த புல்வெளி மீது சென்று நின்றது. விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பதை அடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பயணிகளை பத்திரபடுத்தினர்.

அதிஷ்டவசமாக  விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அமெரிக்க மாகாணங்களில்  மசாசூசெட்ஸும் ஒன்று.  மசாசூசெட்ஸில் பாஸ்டன் லோகன் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு சிகாகோவில் உள்ள ஓஹோர் விமான நிலையத்திலிருந்து ஜெட்ப்ளூ 312 என்ற விமானம் வந்து இறங்கியது.

அப்போது ஏற்பட்ட இயந்திர கோளாறால் விமானம் சற்று நிலை தடுமாறியது. சுதாரித்த விமானிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை நோக்கி  விரைந்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த  காயமும் ஏற்படவில்லை. மேலும், கட்டுப்பாட்டை இழந்த காரணத்தை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அண்மையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில்  நடந்த விமான விபத்து நாட்டையே கதிகலங்க செய்திருக்கிறது. மாணவர் விடுதியின் மீது விழுந்து வெடித்தது 5 மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.  மேலும், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பெரும் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆங்காங்கே விமான விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram